தாயக மண் மீட்புக்காய் மூன்று பிள்ளைகளை கொடுத்த கிளிநொச்சி தாயின் இன்றைய அவலம்!
மூன்று மாவீரர்களை தமிழர் தாயகம் காக்க அர்பணித்த தாயின் இன்றய நிலைமை வெட்கி தலை குனிய வேண்டும் எம் தமிழினம் என கிளிநொச்சியில் இடம்பெற்ற சம்பவம் குறித்து முகநூல்வாசி ஒருவர் தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த தாய் போன்றவர்களுக்கு பாவம் செய்தால் நாங்கள் ஆறு அறிவுள்ள மனிதர்களாக இருக்க முடியாது எனவும் அவர் இடைத்துரைத்துள்ளார். சம்பவம் குறித்து அவர் தனது பதிவில்,
சிங்களவர்களை விட கொடூரமானவர்கள் தமிழ் தலமைகள்
கிளிநொச்சி பிரதேச சபை தரங்கெட்ட நிர்வாக தலைமையில் இயங்குகிறதா என்ற சந்தேகத்தை இந்த சம்பவம் உருவாக்கியுள்ளது. கிளிநொச்சி முருகன் ஆலையத்திற்கு முன்னால் வீதியோரமாக வியாபாரம் செய்து வரும் இவர் மூண்று மாவீரர்களின் தாய் என என்னிடம் தன்னை பல தடவை வீரமாக அடையாளப்படுத்துவார்.
இன்று வீதியில் செல்லும் அனைவரிடமும் கை ஏந்தி என்னுடைய கடையை உடைக்க வேண்டாம் என சொல்லுங்கள் “ என்று அழுது புலம்புகிறார் காரணம் அது கிளிநொச்சி பிரதேச்சபைக்கான இடம் என்பதால் உடைத்து எறிகிறார்கள்.
7-10 பிரதேசபை ஊழியர்கள் 4-6 பொலிசார் ஒரு கிராம சேவகர் இனைந்து இதை செய்ய வேண்டும் என்பதற்கு என்ன அவசரம் ? 2017 ற்கு பின் கிளிநொச்சி நகரில் என்ன அபிவிருத்தி நடந்தது எற்று அவர்களிடம் கேட்டால் அவர்களை செருப்பால் அடித்தது போல் இருக்கும் அதனால் அதை விடுவோம்.
பல வியாபார நிலையங்கள் எந்த நிலைமையில் உள்ளது அதற்கான பதிவு பத்திரங்கள் நேர்த்தியாக உள்ளதா என்று உங்களுக்கு நல்லாவே தெரியும் பணம் பலம் ஆள் பலம் உள்ளவர்களிடம் பதுங்கி பம்முவதும் ஏழைகளிடம் சீறி பாய்வதும் உங்கள் கேவலமான ஆளுமையை அப்பட்டமாக காட்டுகிறது.
அந்த தாயின் மூண்று மாவீரரும் உயிருடன் இருந்திருந்தால் இன்று கடையை உடைத்த உங்களின் நிலமை கவலைக்கிடமாக மாறி இருக்கும் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.