கனடாவில் பருவ மாற்றத்திற்கேற்ப அறிமுகமாகும் நேர மாற்றம்
ஆண்டுதோறும் பருவ மாற்றத்திற்கு ஏற்ற வகையில் கனடாவில் நேர மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது.
இந்நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி இந்த நேர மாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, 5ஆம் திகதி அதிகாலை இரண்டு மணிக்கு ஒரு மணித்தியாலம் பின்நோக்கி நகர்த்தப்படவுள்ளது.
ஏற்படவுள்ள பாதிப்பு
இந்த நேர மாற்றம் எமது அன்றாட நடவடிக்கைகளில் சிறு சிறு பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக நித்திரையில் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் ஒரு மணித்தியால நேர மாற்றமானது பாரியளவில் உடலியல் தாக்கத்தை ஏற்படுத்தாது என கூறப்படுகின்றது.
கடந்த மார்ச் மாதம் பருவ மாற்றம் காரணமாக ஒரு மணித்தியாலம் முன்நோக்கி நகர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.