Pepper Spray வைத்து ஆர்வக்கோளாறு: சிறுமி செய்த செயலால் சக மாணவிகளுக்கு நேர்ந்த சோகம்
காஷ்மீரில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் நடைபெற்ற தற்காப்பு நிகழ்ச்சியில் பெப்பர் ஸ்பிரே வைத்து சிறுமி செய்த செயலால் சக மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்காப்பு நிகழ்ச்சி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தின் ஹந்த்வாரா பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று, மாணவிகளுக்கான தற்காப்பு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அப்போது, பெப்பர் ஸ்பிரே அறிமுகம், பயன்பாடு, அவசியம் குறித்து பேசப்பட்டது.
பெண்களின் தற்காப்புக்காக பிரபலமாக பயன்படுத்தப்படும் பெப்பர் ஸ்பிரேவை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தற்காப்பு நிபுணர்கள் விளக்கம் அளித்தனர்.
சிறுமியின் ஆர்வக்கோளாறு
அப்போது, சிறுமி ஒருவர் பெப்பர் ஸ்பிரேவை ஆராய்ந்து கொண்டிருந்தார். அப்போது, சக மாணவிகள் முன்னிலையில் வைத்து அதனை உபயோகித்தார்.
அப்போது, கூட்டமாக இருந்த மாணவிகளின் கண்களின் மீது பெப்பர் ஸ்பிரே விழுந்ததது.அப்போது, மாணவிகள் அலறினர். சிலர் மயங்கி விழுந்தனர். இதனால், 12 மாணவிகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
பின்னர், அவர்கள் சிகிச்சை முடிந்தவுடன் வீடு திரும்பினார். பெப்பர் ஸ்பிரேவை உபயோகித்த மாணவி, கண்களில் படிந்த பெப்பர் ஸ்பிரே காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், இதன் காரணமாக மாணவிகளுக்கு எந்தவொரு பாதிப்பு இல்லை என மருத்துவர்கள் கூறினர்.