8,400 பேருக்கு அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்!
மாகாண சபைகளின் கீழ் உள்ள உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தரமற்ற ஊழியர்கள் 8,400 பேர் அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கும் வரை, நிரந்தர அரசாங்க சேவைக்கு மாறுவார்கள் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
அத்துடன் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் ஒன்பது மாகாணங்களிலும் சுகாதார மற்றும் கல்வித் துறைகளுக்கு ஆதரவாக திட்டமொன்றுக்கு 9 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்யவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அறிவித்துள்ளார்.
‘நிலையான நாட்டிற்கான கூட்டுப் பாதை’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இராஜாங்க அமைச்சர் இந்த தகவல்கள் வெளியிட்டார்.