;
Athirady Tamil News

ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையர்கள் அடிதடி; ஆபத்தான நிலையில் ஒருவர்!

0

இத்தாலியில் இலங்கையர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வன்முறையாக மாறி , மோதல் காரணமாக ஒருவர் மற்றவரை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்ய முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் இத்தாலியின் அசிலியாவில் உள்ள Amedeo Bocchi பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது. 34 வயதுடைய இலங்கையர் ஒருவர் கத்தரிக்கோலால் மற்றையவரை தொண்டையில் குத்தியதில் படுகாயம் அடைந்துள்ளார்.

ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்
நபர் , தகவலறிந்து சம்பவ இடத்திற்கு 118 என்ற அம்பியுலன்ஸ் அவசர சேவை பணியாளர்கள் மற்றும் பொலிஸார் சென்றுள்ளனர். சம்பவத்தில் 34 வயதான இலங்கையருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

காயமடைந்த இலங்கையரின் அவரது தொண்டையில் ஆழமான வெட்டு காணப்பட்டமையினால் மருத்துவர்களால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதுடன் மேலும் ஒரு ஒரு புதிய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கிரிக்கெட் போட்டி ஒன்றின் போது இடம்பெற்ற வாக்குவாதம் மோதலாக மாறிய நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட நபர் மீது கொலை முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.