தமிழர் பகுதிகளில் ஆதிக்கம்; சீனத் தூதுவர் வருகைக்கு எதிர்ப்பு
எதிர்வரும் 6 ஆம் திகதி சீனத் தூதுவர் தலைமையிலான குழுவொன்று வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதிற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் தலையீடுகளைக் குறைக்கும் நோக்கில் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது. அதோடு வடக்கு மீன்பிடித்துறையில் சீனாவின் ஆகிக்கம் அதிகரித்து வருகின்றமை பலத்த கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.
வடக்கு – கிழக்கு பகுதிகளில் சீனா வலிந்து ஆதிக்கம்
தமிழர்களின் பூர்வீகத் தாயகமான வடக்கு – கிழக்கு பகுதிகளில் சீனா வலிந்து ஆதிக்கம் செலுத்த முனைவது தமிழர்களில் வாழ்வாதாரத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாகும் என்று கடற்றொழிலாளர் சங்கங்கள் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் , எதிர்வரும் திங்கட்கிழமை சீனத் தூதுவர் தலைமையிலான குழுவினர் வருகையின் போது தமது எதிர்ப்பை வெளிப்படுத்த ஆயத்தங்கள் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.