மில்க் ஷேக் ஆர்டர் செய்தவருக்கு பார்சல் வந்த சிறுநீர் – அதிர்ந்து போன கஸ்டமர்!
மில்க் ஷேக் ஆர்டர் செய்தவருக்கு சிறுநீர் டெலிவரி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மில்க் ஷேக் ஆர்டர்
அமெரிக்கா,யூட்டா மாகாணத்தை சேர்ந்தவர் வூட்ஸ். இவர் அங்குள்ள பிரபலமான ஒரு உணவு விநியோக நிறுவனத்தின் செயலி வாயிலாக மில்க் ஷேக்கை ஆர்டர் செய்துள்ளார். உடனே சிறிது நேரத்தில் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து அதனை வாங்கி பார்த்ததில் சிறுநீர் வாசனை வந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார். அதனையடுத்து, டெலிவரி ஊழியரை தொடர்பு கொண்டு கேட்டபோது,
சிறுநீர் டெலிவரி
தனக்கு சிறுநீர் கழிக்க கூட நேரமில்லை என்றும் அதனால் காலிக்கோப்பை ஒன்றில் சிறுநீர் கழித்ததாகவும் அந்த சிறுநீர் கோப்பையை தவறுதலாக மில்க் ஷேக் என மாற்றி கொடுத்து விட்டதாகக் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கஸ்டமர் ஆன்லைன் டெலிவரி ஊழியர் மீது புகார் அளித்துள்ளார். மேலும், பணத்தையும் திரும்ப பெற்றுள்ளார்.