;
Athirady Tamil News

செயற்கை நுண்ணறிவு மனித குலத்திற்கே பேராபத்து : தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கை

0

உலகில் வேகமாக வளர்ந்துவரும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பான ஏஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் மனித குலத்திற்கே ஆபத்தானதாக மாறலாம் என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு இப்போது மிகவேகமாக வளர்ந்து வருகிறது, அதிலும் குறிப்பாக சட்ஜிபிடி (Chat GPT)யின் வருகையானது ஏஐ துறையை முற்றிலும் மாற்றியுள்ளது.

ஏஐ சார்ந்த ஆய்வுகள்
அதுமாத்திரமல்லாமல் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஏஐ களிலே மிகவும் வலிமையான ஏஐ கருவியாக சட்ஜிபிடி இருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

சட்ஜிபிடி யின் வெற்றிக்கு பிறகு பலரும் ஏஐ சார்ந்த ஆய்வுகளில் தீவிரம் காட்டியது மாத்திரமல்லாமல், அதற்கான முதலீடுகளும் எளிதாகக் கிடைத்தது. இதனால் உலகம் முழுவதும் பலரும் ஏஐ சார்ந்து பல்வேறு ஆய்வுகளினை நிகழ்த்தி வருகின்றனர்.

இந்நிலையில் உலகின் தலைசிறந்த வல்லுநர்களால் ஏஐ குறித்துத் தொடர்ந்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி ஏஐ கருவிகளை முறையாக ஒழுங்குபடுத்தவில்லை என்றால் அது மிக மோசமான ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள்.

மேலும், இதனால் உலகில் மிகப் பெரிய வேலையிழப்பு ஏற்படும் அபாயமும் இருப்பதாக அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இதற்கிடையே அண்மையில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உம் அண்மையில் ஏஐ குறித்து எச்சரித்திருந்தார்.

மனித குலத்திற்கே பேராபத்து
ஏஐ இனை தொற்று நோய் அல்லது அணு ஆயுதத்துடன் அவர் ஒப்பிட்டார் எதிர்காலத்தில் அவை மனித குலத்திற்கே பேராபத்தினை ஏற்படுத்தும் என்பதையும் அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கும் நபர்களே ஏஐ கருவிகளால் ஏற்படுக்கூடிய அபாயத்தைச் சுட்டிக் காட்டி வருகிறார்கள் என்பதால் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகிவிட்டது.

இது தொடர்பாக டெஸ்லா மற்றும் டுவிட்டர் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் தலைவரும் உலகின் பெரும் பணக்காரருமான எலன் மஸ்க் முன்னர் ஏஐ இனால் மனித குலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படும் என்று எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.