;
Athirady Tamil News

உலகின் எந்த நாடுகளுக்கும் செல்ல வேண்டாம்… இஸ்ரேல் மக்களுக்கு அவசர எச்சரிக்கை

0

தற்போதைய நெருக்கடியான சூழலில் உலகின் எந்த நாடுகளுக்கும் பயணம் செய்ய வேண்டாம் என்று இஸ்ரேல் தனது குடிமக்களை எச்சரித்துள்ளது.

இஸ்ரேல் மக்கள் மீது தாக்குதல்
ஹமாஸ் படைகளுக்கு எதிரான போர் நீடித்துவரும் நிலையில், உலகின் பல பகுதிகளில் இஸ்ரேல் மக்கள் மீது தாக்குதல் முன்னெடுக்கப்படுவதாக அந்த நாடு தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக இஸ்ரேலிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் Eylon Levy தெரிவிக்கையில், இது உலகெங்கிலும் உள்ள யூத மக்களுக்கு ஒரு ஆபத்து தருணம் என்றார்.

மேலும் உலகளாவிய ரீதியில், உலகெங்கிலும் உள்ள யூத மக்களுக்கு இந்த அபாயகரமான தருணத்தை நினைவூட்ட விரும்புவதாக தெரிவித்துள்ள அவர், யூத-விரோத வெறுப்புப் பேச்சுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், யூதர்களுக்கு எதிரான வன்முறை நிகழ்வுகள் கூட அக்டோபர் 7ம் திகதிக்கு பின்னர் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனாலையே, தேசிய பாதுகாப்பு கவுன்சில் மற்றும் வெளிவிவகார அமைச்சகம் ஒரு அசாதாரண உலகளாவிய பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது என Eylon Levy தெரிவித்துள்ளார்.

பயணம் அவசியமா
வெளிநாட்டிற்கு எங்கும் பயணம் செய்யும் போது அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு இஸ்ரேலின் அனைத்து குடிமக்களையும் கேட்டுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், யூத சமூகங்கள் மற்றும் அவர்களின் நிறுவனங்கள், இஸ்ரேலிய தூதரகப் பணிகள் மற்றும் இஸ்ரேலுக்குச் செல்லும் விமானங்களைக் கையாளும் விமான நிலையங்கள் யூத எதிர்ப்பு மற்றும் வன்முறைக்கான முக்கிய இலக்குகள் என்பதை தாங்கள் கண்டறிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆபத்தான தருணத்தில் உலகில் எங்காவது வெளிநாட்டுப் பயணம் அவசியமா என்பதை கருத்தில் கொள்ளுமாறு அனைத்து இஸ்ரேலியர்களையும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்துகிறது.

மேலும், முடிவு செய்துள்ள பயணங்களை ஒத்திவைக்குமாறும் இஸ்ரேல் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன், உலகில் எங்கும் பயணம் செய்யும் போது அனைத்து குடிமக்களும் தங்கள் இஸ்ரேலியர் அல்லது யூத மக்கள் என்பதை அடையாளத்தின் ஊடாக வெளிப்படுத்துவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.