தினமும் ஒரு டம்ளர் சோம்பு பால் குடியுங்கள்: கிடைக்கும் நன்மைகள் ஏராளம்
வழக்கமாக குடிக்கும் பாலில் புரதம், கால்சியம், ரிபோ ஃபிளேவின், வைட்டமின் பி, வைட்டமின் டிபோன்ற சத்துக்களள் உள்ளன.
பாலிற்கு பதிலாக சோம்பு பால் செய்து குடியுங்கள், சோம்பு பாலில் வைட்டமின்களும் ஆரோக்கியமும் நிறைந்துள்ளன.
இந்த ஆரோக்கியமான சோம்பு பாலை எப்படி செய்வது மற்றும் இதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
எப்படி தயாரிப்பது?
ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் 1/2 டீஸ்பூன் சோம்பு சேர்த்து கொதிக்க விடவும்.
பின்பு இதனை வடிகட்டி வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து குடிக்கலாம்.
கிடைக்கும் நன்மைகள்
சோம்பு செரிமான செயல்முறையை சீராக்க உதவுகிறது. இந்த பாலை குடிப்பதால் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.
சோம்பு பால் கால்சியம், மாங்கனீஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது. இந்த சத்துக்கள் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கின்றன.
சோம்பில் உள்ள இரும்பு மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் உடலில் இரும்பு சத்துத் தேவை பூர்த்தி செய்கின்றன.
மேலும் இது ஹீமோகுளோபின் அளவுகளைப் பராமரிக்க உதவுகின்றன. இது இரத்த சோகை போன்ற உடல்நல பிரச்சினைகளைத் தடுக்கிறது.
சோம்பு பால் குடிப்பதன் மூலம் கண்புரை போன்ற கண் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது.
சோம்பில் கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன, இவை நம் இதய ஆரோக்கியத்திற்கு அத்யாவசியமானவை.
சோம்பில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து உள்ளன. இதை சாப்பிடுவது புற்றுநோய்கள், உடல் பருமன், இதய பிரச்சினைகள், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்க உதவுகின்றன.
ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சோம்பு பால் மிகவும் நல்லது.
சோம்பில் நிறைந்துள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் இரத்தத்தை சுத்தப்படுத்தவும் முகப்பருவை தடுக்கவும் உதவுகின்றன.
மேலும் சரும அழகை பாராமரிக்கவும் பருக்கள் போன்ற சரும பிரச்சனைகளை தடுக்கவும் சோம்பு பாலை குடிக்கலாம்.