திருப்பூர், கோவையில் ஜவுளி உற்பத்தி தொழில்கள் நிறுத்தம் – என்ன காரணம்?
ஜவுளிக்கு முக்கிய நகரங்களில் உற்பத்தியை நிறுத்தி போராட்டம் நடத்துவதாக தெரிவித்துள்ளனர்.
ஜவுளி உற்பத்தி
திருப்பூர், கோவை மாவட்டங்களில், விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் பல காலமாக நடந்து வருகிறது. இங்கு தினமும் ஒரு கோடி மீட்டர் காடா துணிகள் உற்பத்தியாகின்றன. மின் கட்டண உயர்வு, மூலப் பொருள் விலை உயர்வு மற்றும் மார்க்கெட் மந்த நிலை உள்ளிட்ட காரணங்களால், சமீப நாட்களாக, விசைத்தறி தொழில் மிகவும் மலிவடைந்துள்ளது.
அதனால் மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, காடா துணி உற்பத்தி சார்ந்த சிறு குறு தொழில் நிறுவனத்தினர், தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டம்
இந்நிலையில், ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் நூல் விலை ஏற்றம், மின் கட்டண உயர்வை கண்டித்து திருப்பூர், கோவையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜவுளித்தொழில் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டம் தொடர்ந்து இன்று முதல் 20 நாட்கள் (அதாவது 25-ம் தேதி வரை) போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு தொழில்துறை கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தால் பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.