;
Athirady Tamil News

இந்த அழகான ஊரில் குடியேறினால் ரூ.26 லட்சம் தராங்கலாம்! இளம் தலைமுறைக்கு முன்னுரிமை!

0

இத்தாலி நாட்டின் கலாப்ரியா எனும் பகுதியில் குடியேறும் மக்களுக்கு அந்நாட்டு அரசு சுமார் 26.48 லட்சம் ரூபாய் அளிப்பதாக அறிவித்துள்ளது.

குடியேறுபவர்களுக்கு பணம்
இத்தாலி நாட்டின் தெற்கில் கலாப்ரியா Calabria எனும் பகுதி உள்ளது. இது பார்ப்பதற்கு கால்களைப் போலவே இருக்கும் காரணத்தால் TOE என செல்லமாக அழைக்கப்படுகிறது. இந்த அழகிய கடற்கரை நகரத்தில் கடந்த சில வருடங்களாக மக்கள் தொகை வேகமாக குறைந்து வருகிறது.

மேலும், இது அப்பகுதி மக்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த பகுதியில் வெறும் 5000 பேர் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் கலாப்ரியா பகுதியில் குடியேறும் மக்களுக்கு சுமார் 26000 பவுண்ட் (இந்திய மதிப்பில் ரூ.26.48 லட்சம்) அளிப்பதாக இத்தாலி அரசு அறிவித்துள்ளது.

எனவே மக்கள் தொகை குறையும் பிரச்னையை களையும் வேளையில், புதிய வர்த்தகம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை உருவாக்கும் முயற்சியில் இத்தாலி இறங்கியுள்ளது. ஆனால் இதற்காக சில கட்டுப்பாடுகளும் உள்ளன.

இளம் தலைமுறைக்கு முன்னுரிமை
அதில், கலாப்ரியா நகரத்திற்கு வரத் திட்டமிடும் நபர்கள் விண்ணப்பித்து அனுமதி பெற்ற 90 நாட்களில் குடியேற வேண்டும். குடியேறுவது மட்டும் அல்லாமல் வருபவர்கள் முதலீடு செய்து வர்த்தகத்தைத் துவங்க வேண்டும்.

இந்த வர்த்தகம் அடிப்படையில் இருந்தும் துவங்கலாம் அல்லது அங்கிருக்கும் வர்த்தகத்தை கைப்பற்றியும் முதலீடு செய்து விரிவுபடுத்தலாம். புதிதாக குடியேறியவர்களுக்கு 3 வருடத்திற்குள் அந்த தொகையை செலுத்த வேண்டும் என்ற இலக்கை இத்தாலி அரசு கொண்டுள்ளது.

இத்திட்டத்தை இளம் தலைமுறையினருக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்த உள்ளது. மேலும், இதுபோன்று புதிதாகக் குடியேறுபவர்களுக்கு பணம் கொடுப்பது Calabria மட்டும் அல்ல இப்பகுதியில் Civita, Samo and Precacore, Aieta, Bova, Caccuri, Albidona, Santa Severina ஆகிய கிராமங்களும் அளிக்கத் தயாராக உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.