மர்ம நபரால் புடின் உயிருக்கு ஆபத்து: பாபா வங்காவின் சில்லிடவைக்கும் புத்தாண்டு கணிப்புகள்
பிறக்கவிருக்கும் புத்தாண்டில் ஐரோப்பிய நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிக்கும் என்றும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உயிருக்கு அச்சுறுத்தல் வரலாம் எனவும் பாபா வங்கா கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பால்கன் மக்களின் நாஸ்ட்ராடாமஸ்
பால்கன் மக்களின் நாஸ்ட்ராடாமஸ் என குறிப்பிடப்படும் பாபா வங்கா இதுவரை அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல், செர்னோபில் பேரழிவு, இளவரசி டயானாவின் மரணம் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி என பல சம்பவங்களை துல்லியமாக கணித்துள்ளார்.
தற்போது, பிறக்கவிருக்கும் 2024ல் ரஷ்ய ஜனாதிபதி புடின் மீதான தாக்குதல் சம்பவம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை கணித்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மீது உள்ளூர் நபர் ஒருவரால் கொலை முயற்சியை பாபா வங்கா கணித்துள்ளார்.
மேலும், வல்லரசு நாடு ஒன்று உயிரியல் ஆயுதத்தை சோதனை செய்யலாம் அல்லது ஒரு நாட்டின் மீது பயன்படுத்தலாம் என பாபா கணித்துள்ளார். மேலும், ஐரோப்பா முழுவதும் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் கணித்துள்ளார்.
பாரிய பொருளாதார நெருக்கடி
அத்துடன், அடுத்த ஆண்டு உலகப் பொருளாதாரத்தை அசைக்கப் போகும் பாரிய பொருளாதார நெருக்கடி குறித்து பாபா எச்சரித்தார். அதாவது அதிகரித்து வரும் கடன் அளவுகள், அதிகரிக்கும் புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் பொருளாதார சக்தி மேற்கிலிருந்து கிழக்கிற்கு மாறுவதால் இந்த நெருக்கடி ஏற்படும் என அவர் விளக்கமளித்துள்ளார்.
மேலும், பயங்கரமான வானிலை நிகழ்வுகள் மற்றும் இயற்கை பேரழிவுகளும் 2024ல் எதிர்பார்க்கலாம் என பாபா கணித்துள்ளார்.