நீதிபதிகளின் சம்பள வரி விவகாரம்: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
நீதிபதிகளின் சம்பளத்துக்கு வரி விதிக்கும் முடிவை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட குழுவின் ஒப்புதலுடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
இலங்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கம், இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம் மற்றும் தொழிலாளர் நீதிமன்ற தலைவர்கள் சங்கம் ஆகியன இது தொடர்பான மனுக்களை முன்வைத்திருந்தன.
நீதித்துறை அதிகாரிகள் சுயாதீனமாக கடமையாற்றும் குழுவாக இருப்பதால், உள்நாட்டு வருவாய் சட்டத்தின்படி அவர்களது சம்பளத்தில் இருந்து வரி விதிக்க முடியாது என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றம்
இதன்படி, நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன, சோபித ராஜகருணா, மேனகா விஜேசுந்தர, டி.என்.சமரகோன் மற்றும் நீல் இத்தவெல ஆகிய ஐவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் குழாம் முன்னிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த மனுக்களை ஆராய்ந்துள்ளது.
அதில், சோபித ராஜகருணா, மேனகா விஜேசுந்தர மற்றும் நீல் இத்தவெல ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமின் பெரும்பான்மையான நீதிபதிகள், உரிய மனுக்களை நிராகரிக்குமாறு தீர்ப்பளித்தனர்.
தீர்ப்பு
இந்த விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட்டு தீர்ப்பு வழங்குவது நியாயமானதும், தார்மீகமானதும் இல்லை என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
பெரும்பான்மையான நீதிபதிகள் வரி முடிவு எடுப்பது சட்டமன்றம் மற்றும் நிர்வாகத்தின் விஷயம், நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.