;
Athirady Tamil News

அம்பாறையில் மாடுகள் திருட்டு: பொலிஸார் எச்சரிக்கை

0

அம்பாறை பகுதிகளில் உள்ள மாடுகள் அதிகமாக திருட்டுப் போவதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த பிரதேசத்தில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே இவ்வாறு களவாடப்படுவதாக சம்மாந்துரை பொலிஸ் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

மக்களுக்கான விழிப்புணர்வு
களவாடப்படும் மாடுகள் அறுவைக்கு உள்ளாக்கப்பட்டுகின்றன. ஆகவே பொது மக்கள் தங்களுக்கான இறைச்சியை கடைகளில் பெற்றுக் கொள்வதே சிறந்ததாகும்.

பங்குகளுக்காக வெட்டப்படும் மாடுகளில் அதிகமானவை களவாடப்பட்ட மாடுகளாகவே உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனவே பொது மக்களும் மாடுகளை வைத்திருப்போரும் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் அதிகமானவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது அருகில் இருக்கும் அயல்வீட்டு உறவினரிடம் நாம் வெளியே செல்வதாகவும் கூறி , வீட்டில் உள்ள அனைவரும் வெளியே செல்கின்றனர்.சில நேரங்களில் அதை முகநூலிலும் பதிவிடுகின்றனர்.

அதை தொடந்து அவ்வாறான வீடுகளை இனங்கண்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கின்றனர். மக்களை விழிப்புணர்வுடன் இருக்குமாறும் பொலிஸார் சுட்டிகாட்டியுள்ளனர்.

பொலிஸாரின் அறிவிப்பு
இந்த வருடம் மாத்திரம் 03 மோட்டார் வாகனங்கள் திருடப்பட்டுள்ளதாகவும் அவற்றை பொலிஸார் மீட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும் வயல் வேலைகளில் ஈடுபடுவதற்காக செல்வோர் வீதியோரங்களில் வாகனங்களை நிறுத்தும் போது பாதுகாப்புத்தன்மையை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சம்மாந்துறை பிரதேசத்தில் இவ்வாறான குற்றச் செயலில் அதிகமாக போதைபொருள் பாவனையில் உள்ளவர்களே ஈடுபடுகின்றதாக தெரிவித்தனர்.

எனவே இரவு நேரத்தில் உங்களுடைய பிரதேசங்களில் சந்தேகத்திற்கு இடமாக யாரும் நடமாடினால் உடனடியாக சம்மாந்துறை பொலிஸாரிடம் அறிவிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.