;
Athirady Tamil News

லைவ் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் சுட்டுக்கொலை; அதிபர் கண்டனம் – என்ன நடந்தது?

0

லைவ் நிகழ்ச்சியின் போது தொகுப்பாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தயுள்ளது.

துப்பாக்கிச் சூடு
பிலிப்பைன்ஸ் நாட்டில் செயல்பட்டு வரும் கலம்பா கோல்டு எஃப்எம்மில் என்ற நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் ஜுவான் ஜுமலோன் (57). இவர் ‘ஜானி வாக்கர்’ என்ற புனைப்பெயரில் பெயரில் அறியப்படுகிறார்.

ஜுவான் ஜு தெற்கு தீவான் மின்டானாவோவில் உள்ள தனது வீட்டில் வாணொலி நிலையம் அமைத்து செயல்படுத்தி வந்துள்ளார். ​​இந்நிலையில் அவர் ஸ்டுடியோவில் லைவ் நிகழ்ச்சி ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார். அங்கு ஏராளமான மக்களும் இருந்துள்ளனர். அப்போது ஸ்டுடியோவுக்குள் நுழைந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் தொகுப்பாளர் ஜுவான் ஜு மலோனை சுட்டுள்ளார்.

துப்பாக்கி சத்தத்தை கேட்ட அங்கிருந்த மக்கள் அங்குமிங்கும் ஒடினர். நிகழ்ச்சி மேடையில் தொகுப்பாளர் ஜுவான் ஜுமலோன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இது குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஜுவான் ஜுமலோனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொகுப்பாளர் பலி
ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனேவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பிலிப்பைன்ஸில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில் “தொகுப்பாளர் ஜுவான் ஜுமலோனை தலையில் இரண்டு முறை துப்பாக்கியால் மர்ம நபர் சுட்டுள்ளார். சுட்டபின் ஸ்டுடியோவில் இருந்து வெளியேறும் முன் ஜுவான் ஜுமலோனின் தங்க செயினை பறித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கொலை காரணம் என்னவென்றும் விசாரித்து வருகிறோம். ஜுவான் ஜுமலோன் உயிரிழந்ததற்கு முன், அவருக்கு எந்த ஒரு மிரட்டலும் வரவில்லை” என்றனர். மேலும் இந்த தாக்குதலுக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினான்ட் மார்கஸ் ஜூனியர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.