;
Athirady Tamil News

பாதுகாவலர்னு சொல்றீங்க; இப்படி வார்த்தை மட்டும் பேசலாமா? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

0

ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனுக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ரங்கராஜன்
சென்னை, கபாலீஸ்வரர் கோயிலில் மயில் சிலை காணாமல்போன விவகாரம் தொடர்பாக தொழிலதிபர் வேணு சீனிவாசனுக்கு எதிராக

சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யக் கூடாது என ரங்கராஜன் நரசிம்மனுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இதனை மீறி ல் விரும்பத்தகாத வார்த்தைகளை பயன்படுத்தி வருவதாகக் கூறி,

நீதிமன்றம் கண்டனம்
வேணு சீனிவாசன் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷாபானு மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வு, ரங்கராஜன் நரசிம்மனுக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்படுகிறது.

அந்தத் தொகையை 4 வாரங்களில் செலுத்த வேண்டும். சனாதனத்தின் பாதுகாவலர் என்று கூறிக்கொள்ளும் நபர், சமூக வலைதளங்களில் விரும்பத்தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது. அதை ஊக்குவிக்க முடியாது.

சமூக வலைதளங்களில் நாகரிகத்தையும், கண்ணியத்தையும் பேண வேண்டிய அவசியத்தை உணர்த்த இரண்டு வாரங்களுக்கு சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதில் இருந்து அவர் விலகி இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.