இலங்கையில் சடுதியாக குறைவடைந்துள்ள மாம்பழத்தின் விலை
இலங்கையில் தற்போது மாம்பழம் ஒரு கிலோவின் விலை சடுதியாக குறைவடைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக நாட்டில் மாம்பழம் ஒரு கிலோ மிக அதிகமான விலைக்கு விற்கப்பட்ட நிலையில் இன்று விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறைவடைந்த விலை
கடந்த நாட்களில் நாடடில் மாம்பழம் ஒரு கிலோவின் விலை 1,000 ரூபா வரையில் உயர்ந்திருந்தது.
இந்தநிலையில் இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ மாம்பழத்தின் விலை 400 ரூபாவாக குறைவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.