கண்டி நூல்கந்துர பிரதேசத்தில் வீதியை மறித்து மக்கள் போராட்டம்…
கலஹா தெல்தோட்டையில் பிரதேசத்தில் இருந்து ஹேவாஹேட்ட வரையான வீதி மிகவும் பழுதடைந்து காணப்படுவதை கண்டித்து நூல்கந்துர பிரதேசத்தின் நாராஹின்னவிற்கு அருகில் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதேசவாசிகள் மற்றும் பஸ் சாரதிகள் ஒன்றிணைந்து தெல்தோட்டையில் இருந்து ஹேவாஹேட்ட வரையான 18 கிலோமீற்றர் தூரமும், நூல்கந்துரவில் இருந்து 8 கிலோமீற்றர் தூரமும் மிகவும் பழுதடைந்துள்ளது.
போராட்டத்தை தடுத்த பொலிஸார்
மக்கள் நடக்கக்கூட முடியாதளவுக்கு நீர் நிரம்பியுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நான்கு வருடங்களுக்கு முன்னர் அரசியல்வாதிகளும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளும் வீதியை இடித்து அகற்றுவதற்காக வந்த பின்னர் இன்று வரை வரவில்லை எனவும் அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இன்று வீதியில் உள்ள பெரிய பள்ளங்களை கார்பெட் போடாமல் மூடுமாறு கோருகின்றனர்.
மேலும், அவ்வழியாக செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளையும் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். நாராஹின்ன பகுதியில் வீதியின் தரையில் அமர்ந்து வீதியை மறித்த ஆர்ப்பாட்ட மக்களை, பொலிஸார் வந்து தடுத்தனர்.
பின்னர் வாழை செடிகளை கொண்டு வந்து சாலையில் உள்ள பெரிய பள்ளங்களில் நட்டனர், போராட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், போராட்டக்காரர்கள் பலமுறை வீதியை மறித்து, அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு கொண்டு வருமாறு கூறினர்.
இதற்கிடையில், மற்றொரு குழுவினர் பொலிஸாரை புறக்கணித்து, சாலையின் குறுக்கே பெரிய மரங்கள் மற்றும் கற்களை வைத்து சாலையில் ஒரு இடத்தை மறித்துள்ளனர்.பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சென்று போராட்டம் செய்தனர்.
இவ்வீதியில் சுமார் 10 தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடுவதாகவும், வீதியின் மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதால் அவற்றை முறையாக இயக்க முடியாதுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த பகுதியிலேயே முதல் முதலாக தேயிலை பயிரிடப்பட்ட நூல்கந்தூர பிரதேசம் அமைந்துள்ளதோடு, அதிகளவான சுற்றுலா பயணிகள் வரும் இந்த பிரதான வீதி உடைந்து பாரிய குழிகளாக காணப்படுவதால் தற்போது சுற்றுலா பயணிகள் வரும் வீதம் கூட குறைந்தவாறு காணப்படுவதாகவும் மக்கள் சுடடிக்காட்டுகின்றனர்.