;
Athirady Tamil News

நுவரெலியா தபால் அலுவலகத்தை தனியாருக்கு வழங்க தீர்மானம்

0

நுவரெலியா தபால் அலுவலகத்தை தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைக்கு பின்னரான வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

நுவரெலியா தபால் நிலையம் மிகவும் பாழடைந்த நிலையில் காணப்படுவதாகவும், அதனை புனரமைக்கவோ அல்லது வர்ணம் பூசவோ முடியாத நிலையில் அரசாங்கத்தினால் பராமரிக்க முடியாத நிலை உள்ளது.

வளமாக பயன்படுத்துவதற்கான யோசனை
இதனால் இந்த கட்டடத்தை வளமாக பயன்படுத்துவதற்கான யோசனையொன்று ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சீதா எலியா வழியாக வரும் இந்திய சுற்றுலாப் பயணிகள் நுவரெலியாவில் உள்ள சுற்றுலாத் தலங்களையும் பார்வையிடலாம் என தெரிவித்துள்ளார்.

நுவரெலியா தபால் அலுவலகம் 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நுவரெலியா நகரின் மையத்தில் அமைந்துள்ள ஒரு பழமையான கட்டிடமாகும்.

டியூடர் மறுமலர்ச்சி கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட இந்த இரண்டு மாடி சிவப்பு செங்கல் கட்டிடம் நாட்டின் பழமையான தபால் நிலையங்களில் ஒன்றாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.