கொழும்பின் பிரபல தமிழ் ஆண்கள் பாடசாலையில் இப்படி ஒரு அவலம்!
நாட்டில் பெய்துவரும் கனமழையால் கொழும்பிலுள்ள பிரபல தமிழ் ஆண்கள் பாடசாலை வெள்ளத்தில் மிதப்பாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பாசடாலை வளாகம் மற்றும் அதிபர் காரியாலயம் என்பன பெரும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
திடீரென ஏற்பட்ட அதிகரித்த மழை நிலைமையினால் பாதைகளில் வெள்ளம் நிரம்பியிருந்தது இந்நிலையில் கொழும்பின் பிரபல ஆண்கள் தமிழ் பாடசாலையும் வெள்லத்தில் மிதக்கின்றது.
இலங்கையில் டெங்கு அபாய வலையங்களாக 24 வலயங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் கொழும்பு மாவட்டம் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் குறித்த பாடசாலையில் டெங்கு அபாயம் உள்ளதாக ஏற்கனவே கொழும்பு மாநகர சபையினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தொற்று நோய்களுக்கு ஆளாகும் அபாயம்
அதேவேளை நாட்டில் டெங்கு நோயாளர்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் கொழும்பு முதலிடத்தை பிடித்துள்ளது.
இவ்வாறான நிலையில், ஆயிரக்கணக்காண மாணவர்கள் கல்விகற்று வரும் நிலையில் பிரபல தமிழ் பாடசாலையில் இவ்வாறு வெள்ளம் தேங்கியுள்ளமை மாணவர்களின் உடல்நலத்தை பாதிக்கும் ஓர் விடயமாகும்.
அதுமட்டுமல்லாது குறித்த பாடசாலையில் பெரும் செல்வந்தர்களின் பிள்ளைகளும் படித்துவரும் நிலையில், இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்காது விட்டால் பாடசாலை மாணவர்கள் தொற்று நோய்களுக்கு ஆளாக நேரிடும் அபாயமும் காணப்படுகின்றது.
குறித்த காணொளி சமுக்கவலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில் இது தொடர்பில், சம்பந்தப்பட்டவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.