கொழும்பில் கொட்டி தீர்க்கும் பேய் மழை : பல வீதிகளுக்கு பூட்டு
கொழும்பில் கொட்டி தீர்க்கும் பேய் மழை பலவீதிகள் மூடபாடுள்ள நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன் மருதானைக்கும் பேஸ்லைனுக்கும் இடையில் ரயில் தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் களனிவெளி ஊடான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெள்ள நீரில் மூழ்கிய பல பகுதிகள்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பின் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கொழும்பு – கண்டி பிரதான வீதியில் நெலுந்தெனிய மற்றும் உடுகும்புர பகுதிகளுக்கு இடையே மரம் முறிந்து வீழ்ந்ததால் அவ் வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனமழையின் போது வாகன சாரதிகள் மிகவும் கவனமாக வாகனத்தை செலுத்த வேண்டுமென போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம் பதுளை – கொழும்பு பிரதான வீதியின் பெரகல பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதனால் குறித்த வீதியை பயன்படுத்துவோர் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.