இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்!
நுவரெலியாவில் அடையாள சின்னமாக 130 ஆண்டுகளுக்கும் மேலாக நுவரெலியா தபால் அலுவலகம் இருந்து வருகின்றது.
குறித்த தபால் அலுவலகத்தை ஹோட்டலுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியா தபால் நிலையத்திற்கு முன்பாக கைகளில் பதாகைகளை தாங்கியவாறு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தொடர்ந்து நுவரெலியா தபால் நிலையத்தை விற்பதற்கு எதிராக செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.
குறித்த தபால் நிலைய கட்டிடத்தை சுற்றி கருப்பு கொடிகள் கட்டப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்திற்கு எதிரான வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.