;
Athirady Tamil News

64 இந்திய கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி போராட்டம்

0

இலங்கை கடற்படையினரால் அண்மைக்காலத்தில் கைது செய்யப்பட்ட 64 இந்திய கடற்றொழிலாளர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ராமேஸ்வரத்தில் இரண்டு நாள் உணவுத்தவிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

கடற்றொழிலாளர் சங்;கத்தினர் தங்கச்சிமடத்தில் நேற்று முன்தினமும் நேற்றும் இந்த போராட்டத்தை நடத்தினர்.

நூற்றுக்கணக்கான கடற்றொழிலாளர்கள் பங்கேற்ற இந்த போராட்டத்தில்,புதிய தமிழக தலைவர் கே.கிருஸ்ணசாமியும் பங்கேற்றார்.

படகுகள் பறிமுதல்
கடந்த அக்டோபர் 14ஆம் திகதி 27 பேரை இலங்கை கடற்படை கைது செய்து 5 படகுகளையும் கைப்பற்றியது. அக்டோபர் 28 அன்று, 37 கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர் மற்றும் ஐந்து படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தநிலையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த இந்த 64 கடற்றொழிலாளர்கள் இன்னும் இலங்கையால் விடுவிக்கப்படவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.