;
Athirady Tamil News

ஆண்கள் ஒருபோதும் தக்காளியை தவிர்க்க கூடாதாம் : காரணத்தை தெரிஞ்சிக்கோங்க

0

பொதுவாகவே சைவ உணவாக இருந்தாலும் அசைவமாக இருந்தாலும் சமையலில் தக்காளி மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது. நம்மில் பலரும் தக்காளியை உணவிற்கு அழகு சேர்க்கும் பொருளாகவே அதிகம் பயன்படுத்துகின்றோம்.

தக்காளி நாம் அன்றாடம் பார்க்கும் பழங்களில் ஒன்று. ஆனாலும், அதன் தனிச்சிறப்புகளும் அதில் அடங்கியுள்ள சத்துக்களும் நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. ஒவ்வொரு வீட்டின் அன்றாடச் சமையலிலும் இடம் பெறும் முக்கியமான பழமாக தக்காளி காணப்படுகின்றது.

இதன் நிறமும், சுவையும் இதனை சமையலில் சேர்க்கத் தூண்டுகின்றது. எந்த ஊரிலும், எல்லா நாட்களிலும் கிடைக்கும் தக்காளி எந்த அளவிற்கு உடலுக்கு நல்லது? இதனை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதனால் ஏற்படும் நன்மை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தக்காளியின் ஆரோக்கிய நன்மைகள்
தக்காளியின் பயன்கள் தக்காளியில் அடங்கியிருக்கும் ஏராளமான சத்துக்கள் உடல் ஆரோக்கியத்துக்கும் சரும அழகுக்கும் மிகவும் இன்றியமையாத விடயமாக காணப்படுகின்றது.

குறிப்பாக ஆண்களை பொருத்தவரையில் தக்காளியை அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். தக்காளியை தொடர்ந்து சாப்பிடுவதால் ஆண்களைத் தாக்கும் இரண்டாவது பெரிய புற்றுநோயான புராஸ்டேட் புற்றுநோய் அபாயத்தை 20 சதவீதத்ததால் குறைத்துக்கொள்ள முடிகிறது.

மேலும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் அது பெரிதும் துணைப்புரிகின்றது. குறிப்பாக ஆண்கள் வாரத்திற்கு குறைந்தபட்சம் 10 இற்கும் மேற்பட்ட தக்காளிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இதன் மூலம் புற்றுநோய் ஆபத்து கணிசமாக குறைகின்றது. வைட்டமின் -சி மற்றும் இரும்புச்சத்து அதிகமாகவுள்ளதால் குருதிச் சோகையை குணப்படுத்துவதுடன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.

தக்காளியை தினமும் சாப்பிட்டு வாருங்கள். சருமம் இளமையாக இருப்பதுடன், சூரிய ஒளியினால் ஏற்படும் தாக்குதல்களிலிருந்தும் சருமத்தை காக்கும்.

தக்காளி பழத்தில் வைட்டமின் கே மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ளன. இவை நமது எலும்பை உறுதியாகவும் திடமாகவும் மாற்றுகின்றன.

குறிப்பாக வைட்டமின் ஏ அதிகமாக அடங்கியுள்ளதால் கண் பார்வையை மேம்படுத்தும் சக்தி கொண்டுள்ளது. மாலைக்கண் வியாதியைத் தடுக்கும் ஆற்றலும் இவற்றிற்கு உண்டு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.