சென்னையில் காலை முதல் திடீர் என்.ஐ.ஏ சோதனை..!! 3 பேர் கைது..! இது தான் காரணமா..?
தொடர்ந்து அவ்வப்போது தமிழகத்தில் சோதனை செய்து வரும் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சென்னையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
என்.ஐ.ஏ சோதனை
தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ (N.I.A) அதிகாரிகள் சென்னையின் புறநகர் பகுதிகளான பள்ளிக்கரணை, பெரும்பாக்கம், படப்பை போன்ற பகுதிகளில் இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கும் நபர்களை குறித்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கு மாநில காவல் துறையினரும் அவர்களுக்கு ஒத்துழுப்பை அளித்து வருகின்றனர்.
3 பேர் கைது
இதற்கிடையில், சோதனையில் 3 பேர் கைதாகி உள்ளனர். அதில் ஒருவர் வங்காளதேச நாட்டை சேர்ந்தவர் என்றும், மற்றொருவர் மறைமலை நகரி சேர்ந்தவர் என்றும், அதைபோல மறைமலைநகர் பகுதியில் ஜூஸ் கடையில் வேலை செய்து வந்த முன்னா, மற்றும் அவருடன் தங்கி இருந்த மியான் ஆகியோரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த சோதனை குறித்தான முழு விவரங்களும், விசாரணை முழுமையாக முடிந்த பிறகு தான் தகவல் தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், ஏன்.ஐ.ஏ சோதனை நடைபெற்று வரும் நிலையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
படப்பையில் நடைபெற்ற சோதனையில் வங்காள தேசத்தை சேர்ந்த சபாபுதீன் என்பவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர் போன்று போலியாக ஆதார் அட்டை தயாரித்து பணி செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.