;
Athirady Tamil News

மத்திய மகாண பாடசாலை மாணவர்களுக்கான மகிழ்ச்சித் தகவல்!

0

மத்திய மாகாணப் பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை வழங்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் (12.11.2023) ஆம் திகதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால் மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ்மொழி மூலமான சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே, மத்திய மாகாண கல்வியமைச்சின் செயலாளர் மேனக ஹேரத்துக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

எதிர்வரும் (13.11.2023) ஆம் திகதியன்று வழங்கப்படும் விசேட விடுமுறைக்கு, அந்த வாரத்தில் விடுமுறை தினத்தன்று பாடசாலையை நடத்துமாறும் ஆளுநர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.