சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு!
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையானது சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்பாக முக்கியமான அறிவித்தலொன்றினை விடுத்துள்ளது.
அவ்வகையில், இந்த மாதத்தின் முதல் 5 நாட்களில் 22 ஆயிரத்து 202 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள வாராந்த அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள்
அவ்வறிக்கையின் படி,
“இந்த வருடத்தில் இதுவரையில் இலங்கைக்கு 11 இலட்சத்து 47 ஆயிரத்து 657 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.
இந்த மாதத்தின் முதல் 5 நாட்களில் ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.