இலங்கை மின் சேகரிப்பில் நடைமுறைப்படுத்தவுள்ள புதிய திட்டங்கள்
இலங்கை மின் கட்டமைப்பில் 1,110 மெகாவாட் மின்சாரத்தை சேர்ப்பதற்காக ஆறு பாரியளவிலான மீள்புதுப்பிக்கத்தக்க மின் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த திட்டங்கள் தொடர்பாக முன்னேற்ற மீளாய்வுக் கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தம்
மேலும், குறித்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு சுற்றுச்சூழல், நிலம் மற்றும் பிற அனுமதிகளுக்கு உட்பட்டு மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இந்த மாத இறுதிக்குள் முடிக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த கலந்துரையாடலில் இலங்கை மின்சார சபை மற்றும் பேண்தகு எரிசக்தி அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டுள்ளமைக் குறிப்பிடத்தக்க விடயமாகும்.