கிறிஸ்தவ வரலாற்றில் ஏற்பட்ட தீடிர் மாற்றம் – வத்திக்கான் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
மாற்றுப்பாலின இனத்தவர்கள் இனி ரோமன் கத்தோலிக்க ஞானஸ்நானங்களில் கடவுளின் பெற்றோராகவும், மத திருமணங்களில் சாட்சிகளாகவும், ஞானஸ்நானம் பெறவும் முடியும் என்று வாடிகனின் கோட்பாட்டு அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஒப்புதல் அளித்த வத்திகான்
பிரேசில் நாட்டை சேர்ந்த பாதிரியார் ஒருவர் கடந்த ஜூலை மாதம் 6 கேள்விகள் அடங்கிய ஒரு தொகுப்பை வாடிகனுக்கு அனுப்பியிருந்தார்.
அந்த தொகுப்பில் தன்பாலின இனத்தவர்களின் ஞானஸ்நானம் குறித்து கேள்விக் கேட்டகப்பட்டுள்ளன. இந்த கேள்விகளுக்கு வட்டிகான் ஆகாஸ்ட் மாதம் பதிலளித்துள்ளது.
அதில் மாற்று பாலினத்தவர் மற்றும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் ஆகியோர் திருச்சபைகளில் ஞானஸ்நானம் பெறலாம் என்று ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. எனினும் முடிவில் எந்தவித மாற்றங்களும் இருக்கக் கூடாது என்ற நிபந்தனையை முன்வைத்துள்ளது.
இதையடுத்து வேறொரு பாதிரியாரின் விருப்பத்துக்கேற்ப, மாற்று பாலினத்தவர் மற்றும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் கிறிஸ்தவ திருமணங்களில் சாட்சியாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டள்ளது.
மேலும் இந்த முடிவு தொடர்பில் உள்ளூர் பாதிரியாரின் ஒப்புதல் அவசியமாகும். ஆகவே இது குறித்த தெளிவான விளக்கங்கள் அந்த கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை.
இருப்பினும் இந்த அறிவிப்பு தொடர்பில் உலகம் முழுவதும் உள்ள LGBTQ ஆதரவாளர்கள் தங்களது ஆதரவை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.