வர்த்தக நிலைய உரிமையாளரிடம் இலஞ்சம் கோரிய தொழில் திணைக்கள அதிகாரி கைது!
கொழும்பு பனாகொட பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணிப்புரியும் ஊழியர்களிடம் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் தொழில் திணைக்களத்தின் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
பனாகொட பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணிபுரியும் ஐந்து ஊழியர்களை, ஊழியர் சேமலாப நிதியுடன் இணைக்காமல் வர்த்தக நிலையத்தை நடத்திச் செல்வதற்காக 400,000 ரூபாவை வர்த்தகரிடம் இலஞ்சமாக கோரிய குற்றச்சாட்டில் தொழில் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதுருகிரிய பொலிஸார் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
குறித்த வர்த்தக நிலையத்தில் பணிபுரியும் 5 ஊழியர்களுக்கு 11 இலட்சம் ரூபாவை ஊழியர் சேமலாப நிதியாக செலுத்த வேண்டியுள்ளது.
அத்தொகையை செலுத்தாமல் இருக்க தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்காக நான்கு இலட்சம் ரூபாவை இலஞ்சமாகக் கோரியுள்ளார்.
நவகமுவ, ரணால பிரதேசத்தை சேர்ந்த, தொழில் திணைக்களத்தின் கள அதிகாரி என கூறப்படும் 54 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.