டிக்கோயா வெள்ளப்பெருக்கால் மக்கள் அவதி
நாட்டில் இன்று வெள்ளிக்கிழமை (10) பிற்பகல் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் டிக்கோயா பகுதியில் 10க்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஹட்டன் – டிக்கோயா ஆறு பெருக்கெடுத்ததன் காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. மலையகப் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருவதோடு, ஆறுகளும் பெருக்கெடுக்கத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், தொடர்ச்சியாக மழைக்காலங்களில் ஆற்று நீர் பெருக்கெடுப்பதால் பல இடர்களை தாம் சந்தித்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.