சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை இன்னும் இரண்டு வாரங்களில் வெளியிட முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திட்டமிடப்பட்ட தினத்தில் நடைபெறும் அதற்கான தேர்வுக்கான நேர அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் எந்த நிலையிலும் பரீட்சை தாமதமாகாது எனவும் கல்வி அமைச்சர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
பாடத்திட்டங்கள்
பாடத்திட்டங்கள் தொடந்தும் அவர் கூறுகையில், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மூன்று மாதங்கள் தாமதமடைந்துள்ளதால் 2024 சாதாரண தரப் பரீட்சை மே, ஜூன் மாதங்களில் நடைபெறவுள்ளது.
பாடத்திட்டங்கள் யாவும் அடுத்த ஆண்டில் நிறைவு செய்யப்படுவதோடு பரீட்சைகள் நடைபெறும் காலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னோக்கி கொண்டுவரப்படும்” என்றார்.