உலகளாவிய ரீதியில் பாரிய அச்சுறுத்தலாக மாறிய கொடிய நோய்: கண்டுபிடிக்கப்பட்ட முதல் தடுப்பூசி
உலகளாவிய ரீதியில் சுகாதாரத் துறைக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறி வந்த சிக்குன்குனியா நோயிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த தடுப்பூசியானது இந்த நோயிற்காக கண்டுபிடிக்கப்பட்ட முதல் தடுப்பூசியாக கருதப்படுகிறது.
அத்தோடு, இந்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்கா ஒப்புதல்
நுளம்புகளால் பரவும் சிக்குன்குனியா நோயினால் காய்ச்சல் மற்றும் மூட்டு வலி ஏற்படுவதுமட்டுமல்லாமல் குறிப்பாக புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு இது மிகவும் ஆபத்தானது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், தடுப்பூசிக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளமையால் உலகின் பல நாடுகள் இதை ஏற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் மாத்திரம், 440,000 சிக்குன்குனியா நோயாளிகள் கண்டறியப்பட்டதாகவும், 350 இறப்புகள் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.