சபாநாயகரின் மகனுக்கு அரசில் முக்கிய பதவி: விரைவில் நம்பிக்கையில்லா தீர்மானம்
சபநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரபப்ட உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வரப்பிரசாதங்களை மீறி ஜனநாயகத்திற்கு எதிராக சபாநாயகர் செயற்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன் காரணமாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வாக்கெடுப்பு
ஶ்ரீலங்கா கிரிக்கட் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தின் போது சபாநாயகர் வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் சர்வதேச நாடாளுமன்ற அமைப்புக்களுக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சபாநாயகரின் புதல்வருக்கு அரசாங்கத்தின் பதவியொன்று வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் சபாநாயகர் இவ்வாறு அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.