அனலைதீவில் 27 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு
யாழ்ப்பாணம் அனலைதீவில் சிறிலங்கா கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 69 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டது.
நாட்டிற்குள் போதைப்பொருள் ஊடுருவலைத் தடுக்கும் நோக்கில், கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கரையோர மற்றும் கடற்பரப்புகளில் வழக்கமான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற போதே நேற்று (10) குறித்த கஞ்சா மீட்கப்பட்டது.
அனலைதீவில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே கடலோரப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான சாக்கு மூட்டையை மீட்டதுடன், இந்த கேரள கஞ்சாவையும் மீட்டுள்ளனர்.
27 மில்லியன் ரூபாய் பெறுமதியான
அந்த சாக்கில் சுமார் 69 கிலோ மற்றும் 05 கிராம் (ஈரமான எடை) எடையுள்ள 18 கேரள கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை அடுத்து அவை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
இதற்கிடையில், கேரளா கஞ்சாவின் மொத்த மதிப்பு அனலைதீவில் நேற்று (10) காலை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே கடலோரப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான சாக்கு மூட்டையை மீட்டதுடன், இந்த கேரள கஞ்சாவையும் மீட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் வரை கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.