காசாவில் பாரதூரமான மனித உரிமை மீறல்….! எழுந்துள்ள பாரிய குற்றச்சாட்டு
காசாவில் பாரதூரமான மனித உரிமை மீறல்களில் இடம்பெறுவதாக ஐக்கிய நாடுகள் சபையில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமை உயர்ஸ்தானிகரகத்தின் தலைவர் வொல்கர் டேர்க் இக் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
காசா பகுதியில் இஸ்ரேல் மற்றும் இரு தரப்பினரும் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
போர் நிறுத்தம்
சாதாரண பொது மக்களை பழிவாங்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகளை இருதரப்பும் உடனடியாக நிறுத்தி சமாதான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வடக்கு காசாவின் சில பகுதிகளிலும் நாளாந்தம் நான்கு மணி நேரத்திற்கு இராணுவ நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
எனினும் இந்த நடைமுறையினை போர் நிறுத்தம் அல்ல குறிப்பிட்ட இந்த கால பகுதியினில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்கள் என கருதும் இடங்களை நோக்கி நகர முடியும் எனவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, காசாவில் உள்ள மூன்று வைத்தியசாலைகளுக்கு அருகில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக காசாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.