விஜயபாஸ்கருக்கு ரூ.1 கோடி கொடுக்கனும்..கேரள இளம்பெண்னுக்கு நீதிமன்றம் உத்தரவு!
விஜயபாஸ்கருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடாக அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விஜயபாஸ்கர்
திருநெல்வேலி, காவல் ஆணையரிடம் கேரளாவைச் சேர்ந்த ஷர்மிளா என்பவர் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் தன்னிடம் வாங்கிய 14 கோடி ரூபாயில், 3 கோடி ரூபாய் மட்டும் திருப்பியளித்துவிட்டு,
மீதிப் பணத்தைத் தராமல் மிரட்டுவதாக கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து, ஷர்மிளாவுக்கு எதிராக விஜயபாஸ்கர் மான நஷ்டஈடு கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இழப்பீடு
இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் சமூகத்தில் பெரிய பொறுப்பில் இருந்தவர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறப்பாகப் பணியாற்றியவர். அவர்மீது இது போன்ற தவறான அவதூறுகளை கூறக் கூடாது.
அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததற்காக ஒரு கோடி ரூபாயை மான நஷ்டஈடாக ஷர்மிளா செலுத்த வேண்டும். மேலும், சமூக வலைதளங்களில் சி.விஜயபாஸ்கர் குறித்து ஷர்மிளா பதிவிட்டவற்றையும் நீக்க வேண்டும். ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தால், அவற்றையும் நீக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.