65 ஆண்டுகளாக தீபாவளி கொண்டாடாத கிராமங்கள்.., பின்னணியில் இருக்கும் மர்மம்
இந்தியா முழுவதும் தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் இந்த 13 தமிழக கிராமங்களில் மட்டும் தீபாவளி பண்டிகை கொடாடப்படுவதில்லை.
தீபாவளி ஏன் கொண்டாடவில்லை?
தமிழக மாவட்டம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாம்பட்டி மற்றும் அதனைச் சார்ந்த 13 கிராமங்களில் உள்ள மக்கள் 65 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதில்லை.
இதற்கு, அவர்களது முன்னோர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட கடன் வாங்கி, அதனை திருப்பி கொடுக்க முடியாமல் தவித்து வந்ததே காரணம் என்று கூறுகின்றனர்.
அவர்கள் கடனை கட்ட முடியாமல் தவித்ததை பார்த்த அடுத்த தலைமுறை மக்கள் 1958 -ம் ஆண்டில் இனி தீபாவளியை கொண்டாடவே கூடாது என்று தீர்மானம் போட்டனர்.
13 கிராமங்கள்
இதனால், இந்த 13 கிராமங்களில் இருக்கும் மக்கள் அன்று தொடங்கி இன்று வரை தீபாவளி பண்டிகையை கொண்டாட கூடாது என்று முடிவெடுத்து, அதனை செயல்படுத்தி வருகின்றனர்.
மேலும், இந்த கிராமங்களை சேர்ந்தவர்கள் வெளியூரில் இருந்தாலும், அவர்களுக்கு கொண்டாடுவதில்லை. இதனை, இவர்கள் மூன்று தலைமுறைகளாக கடைபிடித்து வருகின்றனர்.