ஒரே விசாவில் வளைகுடா நாடுகள் முழுவதும் சுற்றலாம்: சுற்றுலா பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு
ஒரே விசாவில் வளைகுடா நாடுகள் முழுவதும் சுற்றி வரும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரே விசாவில் வளைகுடா சுற்றலாம்
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வளைகுடா நாடுகள் தொடர்ந்து பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) போன்ற வளைகுடா நாடுகளுக்கு ஒரே விசாவில் பயணிக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் வளைகுடா நாடுகளுக்கு இடையே சுற்றுலா பயணிகள் எத்தகைய சிரமமின்றி எளிதாக சுற்றி வர இந்த ஒருங்கிணைந்த சுற்றுலா விசா திட்டம் அனுமதிக்கும்.
GCC ஒப்புதல்
ஓமனின் மஸ்கட்டில் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் 40வது உள்துறை அமைச்சர்களின் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஒருங்கிணைந்த சுற்றுலா விசாவிற்கு வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த அறிவிப்பை GCC அமர்வின் தலைவர் சயீத் ஹமூத் பின் பைசல் அல் புசைடி வெளியிட்டார்.
இந்த புதிய ஒருங்கிணைந்த விசா நடைமுறை 2024-25ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.