;
Athirady Tamil News

புதையலுக்கு மேலே கம்பளம் விரித்து பிச்சை எடுக்கிறோம்; சபையில் நிமல் பியதிஸ்ஸ ஆதங்கம்!

0

நமது நாட்டில் இயற்கை வளங்கள் உள்ளன. சுற்றுலா துறை உள்ள நாடாக எமது நாடு உள்ளது. இவ்வாறான நிலையில் புதையலுக்கு மேலே கம்பளம் விரித்து பிச்சை எடுத்து கொண்டு இருக்கிறோம். என நிமல் பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்றுள்ள நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடாளுமன்றத்தில் உள்ளேயும் வெளியேயும் மகிழ்ச்சியை எதிர்பார்ப்பவர்கள் அல்ல நாங்கள் 225 உறுப்பினர்களும் கள்வர்கள் என்று கூறும் போது அதற்கு நாங்கள் உரித்துடையவர்கள் அல்ல.

எந்த சமூகத்தில் கறுப்பு பட்டியல்களில் உள்ளவர்கள் அல்ல நாங்கள். நாங்கள் தரமான பணியை மக்களுக்கு ஆற்றி இருக்கிறோம். முன்மாதிரிகையான சேவையை வழங்கியவர்கள் நாங்கள் நாடாளுமன்றத்திக்கு வந்ததில் இருந்து மக்களுக்கு எதிரான வேலைகளை செய்தது இல்லை.

வேறு துறைகளுக்கு நாங்கள் சென்று இருந்தால் அதில் எங்கள் திறமையை வெளிப்படுத்தி இருப்போம். எப்போது நாங்கள் மீள திரும்பி பார்க்கும் போது எங்களுக்கு அச்சுறுத்தல்கள் காணப்படுகிறது.

நாடாளுமன்ற நல்லொழுக்கம்
உள்ளீடு சரியாக இருந்த போதும் வெளியீடு சரியாக உள்ளதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. நமது நாட்டில் இயற்கை வளங்கள் உள்ளன.எல்லா வளங்களும் காணப்படுகிறது. சுற்றுலா துறை உள்ள நாடாக எமது நாடு உள்ளது.

இந்நாட்டுக்காக தியாகம் செய்தவர்கள் பொது விமர்சனதிற்கு தப்ப முடியாத நிலை உள்ளது. அரச உத்தியோகத்தரின் தரத்தை மக்கள் நோக்க வேண்டும். முன்மாதிரிகையை கொடுக்கும் ஆற்றல் இவர்களுக்கு இருக்க வேண்டும்.

ஒழுக்கம் என்பது மிகவும் முக்கியமானது. ஒழுக்கத்துக்கு மாறாக செயற்பட்டால் இவர்களை அகற்ற வேண்டும். நாடாளுமன்றத்திலும் நல்லொழுக்கத்துக்கு மாறாக செயற்பட்டால் நாங்கள் விலக வேண்டும்.

எங்கள் அனைவருக்கும் சமூக பொறுப்பு இருக்கிறது. மேற்கத்தேய சக்திகள் பணத்தை செலவிட்டு எமது நாட்டை குழப்ப பார்க்கின்றன. ஜனநாயகத்திற்கு பாதகம் எற்படும் நிலைமை காணப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.