சிறிலங்கா இராணுவத்தின் பிடியில் 14இற்கும் அதிகமான துயிலுமில்லங்கள் : சிறீதரன் சுட்டிக்காட்டு
வடக்கு கிழக்கில் 14 இற்கு மேற்பட்ட துயிலுமில்லங்கள் இராணுவ முகாங்களாக விடுவிக்கப்படாது காணப்படுவதாக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
தமிழர் தாயகமெங்கும் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தயார்படுத்தல்கள் இடம்பெற்று வரும் நிலையில், 14 இற்கு மேற்பட்ட துயிலுமில்லங்களில் சிறிலங்கா இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்.
தமிழ் மக்கள் மீதான கரிசனை
இவ்வாறான நிலையில், இன்று(11) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த சிறீதரன், சர்வதேச சமூகம் தலையிட்டு உரிய தீர்வை பெற்றுத் தர முன்வர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
காசா போர் நிறுத்தத்தைக் கோரும் சிறிலங்காவின் சிங்களத் தலைவர்கள், காசாவை விட மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ளும் தாயக மக்கள் தொடர்பில் கரிசனை கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.