விடுதலைப் புலிகளுடன் தொடர்பு : இலங்கையர் இந்தியாவில் கைது
விடுதலைப்புலிகளுடன் தொடர்பு என தெரிவித்து இலங்கைப் பிரஜை ஒருவர், மண்டபம் காவல்துறையினரால் இராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் (11) காலை 7 மணியளவில் தனுஷ்கோடி-அரிச்சல்முனை கடற்கரையோரத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகளினாலேயே குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவர் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் என்றும் கைதுக்கு அஞ்சியே அவர் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு தப்பி வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இலங்கை அதிகாரிகளிடம்
அதுமாத்திரமல்லாமல் அவர் விடுதலைப்புலிகள் அமைப்பிலும் தொடர்பு கொண்டிருந்தவர் என அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையிலான தொடர்பு குறித்து உறுதிப்படுத்த இலங்கை அதிகாரிகளிடம் கோரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலதிக விசாரணைகளை
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை வெளிநாட்டினர் சட்டம் 1946 r/w 3 (a) 6 (a) இந்தியாவுக்குள் நுழைதல் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதுமாத்திரமல்லாமல் குறித்த சந்தேகநபரை இராமேஸ்வரத்தில் உள்ள நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்க உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.