பெரும்பான்மை இனத்தவரால் கூறுபோடப்படும் தமிழரின் நிலப்பகுதி!
முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துறை பற்று பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கொக்கிளாய் வடக்கிற்கும் நாயாறுக்கும் இடைப்பட்ட புலிபாய்ந்த கல் பகுதியின் தரை மற்றும் கடற்பகுதிகளை அபகரிப்பதற்கான திட்டங்கள் முழு வீச்சில் இடம்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் யாழ்ப்பாணத்திலிருந்து ஊடகவியலாளர் குழு ஒன்று அந்தப் பகுதியை சென்று பார்வையிட்ட போதே அப்பகுதி மக்கள் தமது ஆதங்கங்களை முன்வைத்தனர் .
இந்த சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் மின்னுற்பத்தி 58 சதவீதத்தால் அதிகரிப்பு
இலங்கையில் மின்னுற்பத்தி 58 சதவீதத்தால் அதிகரிப்பு
பரம்பரை பரம்பரையாக இந்தக் கடற்பகுதியில் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், தென் இலங்கையைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் சுமார் நான்கிற்கும் மேற்பட்ட வாடிகளை சட்டவிரோதமான முறையில் அமைத்து புலி பாய்ந்தகல் கடற்பரப்பை முற்றுமுழுதாக அபகரிக்கும் நோக்கில் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
நான்கு வாடிகளிலும் சுமார் 16 பேர் வரை தங்கி நின்று தொழில் செய்து வரும் நிலையில் குறித்த வாடிகளில் மது விருந்துகள் இடம்பெற்றதற்கான ஆதாரங்களும் காணப்படுகிறது.