பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
பலத்த மழை தொடர்பில் பொது மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த அறிவிப்பு இன்று (12) பிற்பகல் 1.00 மணி முதல் நாளை (13) பிற்பகல் 1.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
பலத்த மழை
இதன்படி, மேல், மத்திய, சப்ரகமுவ, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டைச் சூழவுள்ள தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக, நாட்டைச் சூழவுள்ள மழை நிலைமை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.