;
Athirady Tamil News

அரசால் கொண்டுவரப்படவுள்ள புதிய கடற்றொழில் சட்டம்: தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை

0

புதிதாக கொண்டுவரப்படவுள்ள கடற்றொழில் சட்டம் நிறுத்தப்பட வேண்டும் என தேசிய கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்கத்தின் அமைப்பாளர் ஹேமன் குமார தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று திங்கட்கிழமை (13) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டம் கடற்றொழிலாளர்கள் மத்தியில் கொண்டுவரப்பட்டு அவர்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட வேண்டும்.

சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும்
இந்த சட்டத்தின் ஊடாக கடற்றொழிலாளர்கள் தொடர்பில் அனைத்தும் பணிப்பாளரின் அதிகாரத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தானது.

எனவே அந்த சட்டத்தில் உள்ள குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டு குறித்த சட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும்.

அதனை நிறைவேற்றுவதாக இருந்தால் கடற்றொழிலாளர்கள் மத்தியில் கருத்து பரிமாற்றத்திற்கு உள்ளாக்கி, அதில் பல விடயங்கள் திருத்தி அமைக்கப்பட வேண்டும்.

அதே நேரம் புதிய பட்ஜெட்டில் கடற்றொழிலாளர்களுக்கான எந்த ஒரு திட்டமும் உள்வாங்கப்படவில்லை எனவும் இது தொடர்பாக அனைவரும் பேச வேண்டும் என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.