ஆசிரியையின் பிள்ளைகளை கொலை செய்யப் போவதாக மிரட்டிய கிராம சேவகருக்கு நேர்ந்த கதி!
ஹோமாகம சுவபுதுகம பிரதேசத்தில் முன்பள்ளி ஆசிரியை ஒருவரின் பிள்ளைகளைக் கொலை செய்யப் போவதாக மிரட்டிய கிராம சேவகரை இம்மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம பதில் நீதிவான் பந்து லியனகே உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் ஹோமாகம, பிட்டிபன தெற்கு பகுதியைச் சேர்ந்த கிராம சேவகர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஹோமாகம – சுவபுதுகம பிரதேசத்தில் முன்பள்ளி ஆசிரியை ஒருவரை மிரட்டி 20 இலட்சம் ரூபா கப்பம் கோரியதாகவும், கொடுக்கவிட்டால் 3 பிள்ளைகளையும் கொன்று விடுவதாக அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஹோமாகம தலைமையக பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.
இதனையடுத்தே குறித்த கிராம அதிகாரி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.