வரவு செலவு திட்டத்தில் துண்டு விழும் தொகை 2,851 மில்லியன் ரூபா
இன்று (13) சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு அமைய, 2024 ஆம் ஆண்டில் அரச வருமானம் 04,172 பில்லியன் ரூபாவாகும்.
2024 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு அமைய, அரசாங்கத்தின் மொத்த செலவீனம் 06,978 பில்லியன் ரூபாவாகும்.
இதற்கிணங்க, வரவு செலவு திட்டத்தில் துண்டுவிழும் தொகை 02,851 மில்லியன் ரூபா.
அடுத்த வருடத்தில் கடனையும் வட்டியையும் செலுத்துவதற்காக அரசாங்கம் 6,919 பில்லியன் ரூபாவை செலவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி, அடுத்த வருடத்திற்கான கடன் தேவை 7,350 பில்லியன் ரூபாவாகும்.
இதற்கிணங்க, அரசாங்கத்தின் கடன் எல்லையான 3900 பில்லியன் ரூபாவை மேலும் 3450 பில்லியன் ரூபாவால் அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.