லெபனானுடன் போர் வெடிக்கும் அபாயம்! கடும் கோபத்தில் இஸ்ரேல்
லெபனானுக்கு எதிராக போருக்கான அபாயம் இருப்பதாக இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
இஸ்ரேல் மீது லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் நேற்று தாக்குதல் நடத்தியதால் இஸ்ரேல் கடும் கோபம் அடைந்துள்ளது.
பகிரங்க எச்சரிக்கை
இதனால், லெபானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் கண்டிப்பாக எதிர்விளைவுகளை சந்திப்பார்கள் என்றும் இஸ்ரேல் பகிரங்கமாக எச்சரித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல் இராணுவத்திற்கும் இடையே கடுமையான மோதல்கள் கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் நடந்து வருகிறது.
இந்த நிலையில், நேற்று லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய தாக்குதல்களில் ஏழு இஸ்ரேலிய வீரர்கள் உள்ளிட்ட 17 பேர் காயமடைந்துள்ளனர்.
போருக்கான அபாயம்
ஒரு மணி நேரத்திற்குள் 15 ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், அவற்றில் நான்கு ஏவுகணைகளை இஸ்ரேல் இராணுவம் தாக்கி அழித்ததாகவும் கூறப்படுகிறது.
ஹிஸ்புல்லாவின் ஏவுகணை ஆயுதக் களஞ்சியம் ஹமாஸின் ஆயுதக் களஞ்சியமாக இருப்பதாக நம்பும் இஸ்ரேல், லெபனானுக்கு எதிராக முழுமையான போருக்கான அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளது.