காஸாவில் மோசமான மனிதாபிமான நெருக்கடி: மேக்ரானுடன் விவாதித்த ட்ரூடோ
காஸாவில் ஏற்பட்டுள்ள மோசமான மனிதாபிமான நெருக்கடி குறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தொலைபேசியில் பிரான்ஸ் ஜனாதிபதியுடன் விவாதித்துள்ளார்.
நீடிக்கும் போர்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் 38வது நாளாக நீடித்து வருகிறது. இஸ்ரேலின் தாக்குதலால் காசா பெருமளவு சிதைந்துள்ளது.
குறிப்பாக மருத்துவமனைகள் தாக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 11,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேக்ரானுடன் விவாதம்
இந்த நிலையில் காஸாவின் நிலை குறித்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடன் பேசியுள்ளார்.
இதுதொடர்பாக ட்ரூடோ வெளியிட்டுள்ள பதிவில், ‘இன்று தொலைபேசியில் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடன் பேசினேன். காஸாவில் ஏற்பட்டுள்ள மோசமான மனிதாபிமான நெருக்கடி, பாலஸ்தீனிய குடிமக்களின் துன்பத்தின் அளவு மற்றும் பொதுமக்களின் உயிர் இழப்புகள் பற்றிய ஆழ்ந்த கவலைகளை நான் பகிர்ந்து கொண்டேன்.
ஹமாஸால் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்’ என தெரிவித்துள்ளார்.
On the phone today, President @EmmanuelMacron and I shared our deep concerns over the dire humanitarian crisis in Gaza, the scale of suffering of Palestinian civilians, and the loss of civilian life. We also called for the immediate release of those being held hostage by Hamas.
— Justin Trudeau (@JustinTrudeau) November 14, 2023